“நாம் தனித்தனி தீவுகளாக மிதக்கிறோம்!”.. ‘ஜெய்பீம்’ அபராத கோரிக்கை தொடர்பாக நாசர் கருத்து!
முகப்பு > சினிமா செய்திகள்த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களை மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கும் காவலரின் பெயர் மற்றும அவரது வீட்டின் பின்னணியில் இருந்த குறிப்பிட்ட சமூகக்குறியீடுகள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, யாரையும் புண்படுத்தும் நோக்கு இல்லை என்றும், குறிப்பிட்ட அந்த சர்ச்சைக்குரிய காலண்டர் படம் மாற்றப்பட்டுவிட்டதாகவும் அறிக்கையில் விளக்கத்துடன் கூடிய பதில்களை வெளியிட்டிருந்த சூர்யா, கதாபாத்திரங்களை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்றும் படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், இந்த விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்ததுடன், 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக நடிகர் நாசர், இன்று (16.11.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓ என் பாசத்திற்குரியீர்! அரசியலை வியாபாரமாக்குவதும், வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியாக குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது.
கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை. சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது. நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது.
ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்க செய்கின்றன. தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.
இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று. மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உலகஞ்செய்வோம். நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.
Source: Johnson pro
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Jaibhim Issue Gun Toting Police Security Suriya House Chennai
- H Raja Speech Video Over Jai Bhim Calendar Pictiure Issue
- Vetrimaaran Sensational Tweet Over Suriya Jai Bhim Issues
- Master Raghava Lawrence Meet Jai Bhim Senkeni Parvathi
- SI Film Chamber Request Anbumani Over Criticising Suriya
- All India Suriya Fans Club Request Fans Over Jai Bhim Issues
- Suriya Open Letter To Vck Thol. Thirumavalavan Mp
- CPIM Request Suriya Helps Jaibhim Real Senkeni And Children
- Jai Bhim Beat Shawshank Redemption With 9.6 IMDb Rating
- Suriya's 'Jai Bhim' Gains Top Position And International Recognition
- Six Star Faces Glow In 'Jai Bhim' Movie Success
- Suriya Replies To Anbumani Ramadoss Over Jaibhim Controversy
தொடர்புடைய இணைப்புகள்
- "நான் படிக்கல ஆனா என் பிள்ளைங்க படிப்பாங்க" நரிக்குறவ பெண் அஸ்வினி ஊர் மக்கள் பேட்டி
- Jai Bhim Kiruba: "சாப்பாடு கேட்டாலே அவமானம்... ஓரமா நிக்குறத எப்படி பெருமையா..." - Bala Hasan
- ''சூர்யா Sir ஐ எட்டி உதைச்சா 1 லட்சமா ? நானும் வன்னியர் தான்...''ஆதாங்க பட்ட நடிகர் Arunraja பேச்சு
- "எட்டி உதைச்சா 1 லட்சமா... நானும் வன்னியர் தான்" - Arun On Suriya, Jai Bhim
- 'ஜெய் பீம் சர்ச்சையில் திரௌபதி குறித்து ட்விட்' வைரலாகும் இளைஞரின் ட்விட்டை பகிர்ந்த திருமா
- Real Jai Bhim Sengani - Rajakannu's Wife Parvathy Speech #BehindwoodsO2 #Shorts
- "தறிகாரன்னா பொண்ணு கொடுக்க மாட்டாங்க..." பட்டு நெசவாளர்கள் Real Life Story
- "Prakash Raj தான் அந்த Hindi Dialogue-ஏ சொல்லி கொடுத்தது" - Jai Bhim சேட்டு Kulothungan Interview
- Hindi Dialogue Prakash Raj சொல்லி கொடுத்தது | Jai Bhim Kulothungan Udhayakumar
- Madurai Muthu மூஞ்சிய பாத்ததும் Rs 20 Extra 🤣
- "மிருகத்தை விட மனுஷனுங்கள பார்த்தா தான் பயம்" பீதியில் வாழும் பழங்குடியினர் மக்கள் பேட்டி #JaiBhim
- "JAI BHIM-ல ஏன் இத பண்ணீங்க?" SURIYA-விடம் 9 கேள்வி எழுப்பிய ANBUMANI RAMADOSS