www.garudabazaar.com

ஜெய்பீம்-ஐ பாராட்டி CPIM கோரிக்கை!.. நிஜ செங்கேனிக்கு சூர்யா உதவி.. பரபரப்பு கடிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை மையமாகக் கொண்டு சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவான ஜெய் பீம் படத்துக்கு தமிழக முதலமைச்சர் தரப்பு உட்பட பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

CPIM request Suriya helps jaibhim real senkeni and children

த.செ.ஞானவேல் இயக்கிய இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நவம்பர் 2-ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து பழங்குடி இருளர் இன மக்களின் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுக்காக நடிகர் சூர்யா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக நிதி அளித்திருந்தார்.

இதனிடையே படத்தில் வரும் நிஜ செங்கேனியான பார்வதி அம்மாள் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளம் உட்பட ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி மூலம் அவர் பற்றி தெரியவர, நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டித்தருவதாக வாக்களித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஜெய்பீம் திரைப்படத்துக்கு வாழ்த்து சொல்லியும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தொடர் கள போராட்டங்கள் மூலம் படத்தின் உண்மை நிகழ்வில் கிடைக்கப்பெற்ற நீதியையும் குறிப்பிட்டு, இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

குறிப்பாக, பார்வதி அம்மாள் போன்றோரின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்து உதவும்படியும் கோரிக்கையை முன்வைத்த கே.பாலகிருஷ்ணன், “ஜெய்பீம்.. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்” என்றும் தன் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

CPIM request Suriya helps jaibhim real senkeni and children

இந்நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சூர்யா, இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு எழுதியுள்ள தமது பதில் கடிதத்தில்,  “ஜெய் பீம் திரைப்படம் குறித்த உணர்வு பூர்வமான பாராட்டுக்கு நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும் அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்ட பலரும் துணை நிற்பதை கண்டு நெகிழ்ந்து இருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தி இருக்கிறோம். நீதிபதி சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி உள்ளிட்டோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

CPIM request Suriya helps jaibhim real senkeni and children

மேலும் ராஜாக்கண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் திரு.பார்வதி அம்மாளின் அவர்களின் பெயரில் 10 லட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதில் இருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகை போய்ச் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப் பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அன்புடன், சூர்யா.” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

CPIM request Suriya helps jaibhim real senkeni and children

People looking for online information on 2D Entertainment, Jai Bhim, Suriya will find this news story useful.