"அப்டியே அப்பா மாறி.. அதே ரத்தம்"... Vj சித்து மகளா இது... நல்லா வளர்ந்துட்டாங்களே...!
முகப்பு > சினிமா செய்திகள்வளர்ந்து வரும் இணைய சேவைகளால் பல புதிய கலைஞர்களை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி யூடியுப் மூலம் தனது திறமையை நிரூபித்து இன்று முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் சித்து. ஒரு தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் Fun Pandrom என்ற நிகழ்ச்சியை நிஷாந்த், ஷெரிப் ஆகியோருடன் சேர்ந்து வழங்கி வந்தார். பொதுமக்களை பிராங்க் செய்யும் இவர்களது வீடியோக்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. பிராங்க் செய்யும் போது மக்கள் சிலர் தவறாக நினைத்து அவரை அடித்த போதிலும் கூட அதை தனது ரசிகர்களுக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் ஏற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த கலைஞன்.
![Vj siddhu family video with daughter Vj சித்து மகளா இது செம கியூட் Vj siddhu family video with daughter Vj சித்து மகளா இது செம கியூட்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vj-siddhu-family-video-with-daughter-vj-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு வந்தது. ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் கில்லாடி ராணி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதேபோல் சமூக மாற்றத்திற்கான சிந்தனை செய்ய என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவரால் பிரபலம் அடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர். முக்கியமாக பிஜிலி ரமேஷ் பற்றி சொல்லலாம். இந்நிலையில் சித்து, புனிதா ஷாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். இந்நிலையில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். சிறிய குழந்தையாக மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஆனால் இப்பொழுது நன்றாக நடக்கும் அளவிற்கு குழந்தை வளர்ந்து விட்டது. இந்நிலையில் அவரது மகள் தந்தையுடன் சேர்ந்து செய்யும் சிறிய சிறிய ரசிக்கக்கூடிய சேட்டைகளை அவரது மனைவி தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.