கொரோனா நேரம் குறித்து அஞ்சனா பகிர்ந்த ஃபோட்டோ - ''எனக்கு கொடுத்த எச்சரிக்கையா? - கணவர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக தமிழக அரசு இன்று (24.03.2020) மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்வதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதன் படி மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், வெளியில் செல்ல நேர்ந்தால், கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்ற போன்ற நடைமுறைகள் அரசு மற்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலக பிரபலங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உத்தரவை வழங்கி வருகிறன்றனர்.
இதன் ஒரு பகுதியாக பிரபல தொகுப்பாளர் அஞ்சனா தனது கணவரும், பிரபல திரைப்பட நடிகருமான சந்திரமௌலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ''தனிமைப்படுத்தப்பட்ட நேரம், வீட்டில் இருங்க. நான் தான் அவரிடம் அந்த கூலர்ஸ் அணிய சொல்லிக்கேட்டேன். அது விடுமுறை தின உணர்வை ஏற்படுத்தும்.
முட்டாள்தனம் தான் ஆனால் என்ன செய்வது #Boredom என்ற ஹேஷ்டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த சந்திரமௌலி, ''இந்த ஹேஷ்டேக் எனக்கு கொடுத்த எச்சிரக்கையா?'' என கேட்க, ''ஒரு வகையில ஆமா'' என்று அஞ்சனா பதிலளித்துள்ளார்.