‘ஆஸாத் ஹிந்து’வில் சுதந்திர போராட்ட வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு.. சென்சேஷனல் அறிவிப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்“83 மற்றும் தலைவி” படங்களின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி.
இவர், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத்திற்கு போராடிய, மறக்கப்பட்ட வரலாற்று நாயகர்களின் கதையை சொல்லும், “ஆஸாத் ஹிந்து” திரைப்பட தொடரில், தான் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படத்தை குறித்து அறிவித்திருக்கிறார்.
வீராங்கனை துர்காவதி தேவி
அதன்படி “ஆஸாத் ஹிந்து” திரைப்பட தொடரிலிருந்து, முதல் திரைப்படமாக, சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட, மறக்கப்பட்ட “வீராங்கனை துர்காவதி தேவி” என அழைக்கப்பட்ட துர்கா பாபியின் வாழ்க்கை திரைக்கு எடுத்து வரப்படவுள்ளது.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு எதிராக, பகத் சிங் மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற வீரர்களுக்கு, சுதந்திரத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் போராட தூண்டுகோலாக அமைந்த வீராங்கனை துர்காவதி தேவி. ஆங்கிலேய உளவு நிறுவனமான MI5 ஆல் “இந்தியாவின் அக்னி” என அழைக்கப்பட்ட வீராங்கனை தான் துர்காவதி என்பதும் குறிப்பிடத் தக்கது.