வினோதய சித்தம் படத்தை வெறும் 19 நாளில் சமுத்திரக்கனி இயக்கினார்! படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் , இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி.
தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதாஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாலாஜி மோகன்,ஹரிகிருஷ்ணன் , அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள வினோதய சித்தம் படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நாளை நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வினோதய சித்தம் திரைப்படம் வெளியாகிறது .
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிஜிட்டல் வெளியீடு நேற்று ( 11 .10 .21 ) சென்னையில் நடைபெற்றது .
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசியவை,
இந்த படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக படத்தை எடுத்து தந்துள்ளார் சமுத்திரக்கனி .இந்த படத்தை பார்த்து பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளனர். நீங்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களை அறியாமலேயே எழுந்து நின்று கை தட்டுவீர்கள் .
நடிகர் சமுத்திரகனி பேசியவை,
பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குனர் இயக்குவான் . ஒரு நல்ல கதை இயக்குனரை இயக்கும் . அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது .
இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாக சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியவை,
இயக்குனர் சமுத்திரகனி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த படத்தை தயாரித்த ராமநாதன் சாருக்கும் இப்படிப்பட்ட நல்ல படத்தை வெளியிடும் ZEE 5 நிறுவனத்திற்கும் நன்றி. இப்படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக அருமையாக கொண்டுவந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .இதுவரைக்கும் சப்போர்ட் செய்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.
நடிகர் அசோக் பேசியவை,
வினோதய சித்தம் இது வெறும் படம் அல்ல .நம் வாழ்க்கையில் அனைவரும் கற்கவேண்டிய பாடமும் கூட. அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படைப்பில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சமுத்திரகனி சாருக்கும் அபிராமி ராமணநாதன் சாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசியவை :
இந்த படத்திற்கு மிக கவனமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என சமுத்திரகனி தெரிவித்தார் அதுபோலவே படத்தில் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தை 19 நாட்களில் எடுத்து முடித்தோம். அது சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும் .இந்த படத்தில் நவரசம் கலந்த நடிப்பில் தம்பி ராமையா அவர்கள் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி சார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Samuthirakani Star In New Family Drama ‘Vinodhaya Sitham’
- Vijay Antony Speech In SAC Movie Launch Starring Samuthirakani
- Samuthirakani's Next Is With This Bigg Boss Tamil Actress And Popular Comedian - Interesting Title Announced
- Samuthirakani Starring VellaiYaanai Premier Sun Tv Date Announce
- Sasikumar Tweeted To Samuthirakani Continue Our Friendly Journey
- Samuthirakani Vellaiyaanai Santhosh Narayanan OTT Release
- Samuthirakani's Next To Have Its Digital Television Premiere Soon In Sun TV
- Directors Bala, Samuthirakani Pay Their Last Respect To KV Anand; Heart Melting Visuals
- Samuthirakani Birthday With Andhagan Team பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சமுத்திரக்கனி
- Interesting First Look Of Pa Ranjith’s Next Productional Venture Writer Ft Samuthirakani Out
- Samuthirakani Vote Actor Breaks Silence From Andhagan Sets
- Samuthirakani Says Its Frightening To Act In Front Of Kangana
தொடர்புடைய இணைப்புகள்
- Padathula Social Message Solra Manasu Irukke!! 😍💯#Samuthirakani #Throwback #BehindwoodsMemes
- Enna Dhairiyam Manushanuku!! 😃🔥#Samuthirakani #Throwback #BehindwoodsMemes
- VIDEO: முதல் முறையாக மேடையில் கண் கலங்கிய SAMUTHIRAKANI | Naan Kadavul Illai
- 🔴 KV Anand-க்கு இயக்குனர் பாலா, சமுத்திரக்கனி செலுத்திய இறுதி அஞ்சலி | RIP KV Anand
- 🔴Live : KV Anand உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீரோடு செய்த இறுதி சடங்கு | RIP KV Anand
- Video: Prashanth, Simran உடன் Samuthirakani-யின் Birthday Celebration | Priya Anand, Andhagan
- Manav Vij - Samuthirakani | Prashanth's ANDHAGAN: The Who's Who Of Andhadhun Tamil Remake - Character Details! - Slideshow
- இப்படி கூட ஒரு Make Up இருக்கா😳ஒரு முழு கிராமமும் இந்த அளவுக்கு நடிக்குமா? Aelay Madhumitha Intervie
- Aelay படத்துல ஒரு ஊரையே நடிக்க வச்சிருக்கோம்., படத்தோட Inspiration இதான்! - Halitha & Team Interview
- Nadodigal | 150 All-Time Best Cult Tamil Films by Behindwoods | Part 02 - Slideshow
- Nadodigal | Idhu Poota case mamu - Slideshow
- Nadodigal | Moondru Per Moondru Kaadhal - Slideshow