www.garudabazaar.com

LATEST: அஜித் - விஜய் - சூர்யா பட வில்லன் நடிகருக்கு நிச்சயதார்த்தம்! பொண்ணு யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வித்யுத் ஜாம்வால் பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டிலும் ரசிகர்களை கவர்ந்தவர். தல அஜித்துடன் 'பில்லா 2', விஜய்யுடன் 'துப்பாக்கி',  'மற்றும் சூர்யாவுடன்' அஞ்சான் படங்களில் நடித்தவர்.

VILLAIN GETS ENGAGED TO HIS LOVE SECRETLY - PICTURES GO VIRAL!

பேஷன் டிசைனர் நந்திதா மஹ்தானியுடன் நடிகர் வித்யுத் ஜம்வாலின் நிச்சயதார்த்தம் குறித்து பல வதந்திகள் காற்றில் மிதந்த பிறகு, இருவரும் சமூக ஊடகங்களில் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளனர்.

VILLAIN GETS ENGAGED TO HIS LOVE SECRETLY - PICTURES GO VIRAL!

வித்யூத் தனது சமூக வலைதள பக்கத்தில் நந்திதாவுடன் உள்ள இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் ஒன்று அவர்கள் சுவரில் ஏறி, கயிறுகளால் கட்டப்பட்டு ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும், இரண்டாவது தாஜ்மஹாலுக்கு முன்னால் இருப்பதை போலவும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்கள் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது உடற்பயிற்சி முறை பற்றி அடிக்கடி படங்களை வெளியிடும் வித்யூத் ஜம்வால், அவரது 'கமாண்டோ' சீரிஸ் படங்கள் மற்றும் பிற அதிரடி படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் கடைசியாக மகேஷ் மஞ்சரேக்கர் எழுதி இயக்கிய 'தி பவர்' படத்தில் காணப்பட்டார். அடுத்து, அவர் 'குதா ஹாபிஸ் 2' மற்றும் 'சனக்' ஆகிய படங்களில் நடிக்கிறார்.

 

 

VILLAIN GETS ENGAGED TO HIS LOVE SECRETLY - PICTURES GO VIRAL!

People looking for online information on Vidyut Jammwal will find this news story useful.