RRR, KGF 2 படங்களுக்கு அடுத்து அமெரிக்காவில் ‘விக்ரம்’ படைத்த சாதனை… வெளியான மாஸ் தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்விக்ரம் திரைப்படம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
விக்ரம்….
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
வசூல் மழை…
உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நிலவரம்…
இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் விக்ரம் பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் விக்ரம் திரைப்படத்தை வெளியிட்ட ப்ரைம் மீடியா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் 14 நாட்களில் 2.6 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய்) வசூலித்துள்ளதாக அறிவித்து இருந்தது. மேலும் தொடர்ந்து 60 திரையரங்குகளில் 3 ஆவது வாரத்தில் ஓடிக்கொண்டு இருப்பதாக அறிவித்து விரைவில் 3 மில்லியன் டாலர்கள் வசூல் ஈட்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான தென்னிந்திய படங்களில் RRR மற்றும் KGF 2 போன்ற பேன் இந்தியா திரைப்படங்களுக்கு அடுத்து அதிக வசூல் செய்த படமாக விக்ரம் அமைந்துள்ளதாக ப்ரைம் மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் மிகப்பெரிய வசூல் சாதனையை விக்ரம் திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kamal Haasan Vikram Movie Tamil Nadu Box Office Collection
- Kamal Haasan Vikram Movie Australia Box Office Collection 1 Million USD
- Udhayanidhi Stalin About Vikram Movie Tamilnadu Box Office Collection
- Jurasic World Dominion India Box Office Collection
- T Rajendar Will Fly To America Press Meet Today
- Actor Napoleon Viral Video Farming In America
- Vikram Movie USA Box Office Collection 2.5 Million USD
- Kamal Haasan's Vikram Movie USA Box Office Collection 1.5 Million USD
- Kamal Vikram Movie USA Box Office Collection 1.5 Million USD
- Kamal Haasan Vikram USA Box Office Collection Details
- Kamal Haasan Vikram Movie USA Box Office Collection
- American Actor And Producer Ray Liotta Died At The Age Of 67
தொடர்புடைய இணைப்புகள்
- இந்தியாவிற்கு அச்சுறுத்தல்? 'இரகசிய திட்டத்தால்' பயமுறுத்தும் சீனா..! அன்றே கணித்த அமெரிக்கா
- കാറും ബൈക്കുമൊന്നുമല്ല എല്ലാ വീട്ടിലും വിമാനം!! അത്ഭുതമായി അമേരിക്കയിലെ ഒരു നഗരം
- ചെന്നൈയിൽ ...
- வீதியை கைப்பற்றிய ராமர்கள்.. RRR-ஐ தரிசிக்க புல்லட் யாத்திரை..! ஸ்தம்பித்து போன ஹைதராபாத்
- 1000-க்கும் மேற்பட்ட ராமர்கள்.. மிரண்டு போன ராஜமௌலி..! மாஸ் சம்பவம்
- 'சின்ன சின்ன அன்பில் தானே..' தெருவோர சிறுவர்களுக்கு Surprise..! திக்குமுக்காட வைத்த பிரபல நடிகர்
- பெட்ரோல் விலை ரூ.300 ஆகலாம்? "உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு !” - எச்சரிக்கும் ரஷ்யா
- விமானங்கள் பறக்கத்தடை..அமெரிக்காவின் அடுத்தடுத்த ACTION...ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு
- 2019ൽ കാണാതായ പെൺകുട്ടിയെ 2 വർഷത്തിന് ശേഷം കണ്ടെത്തി. സത്യാവസ്ഥ എന്ത് ??
- കറങ്ങി നടന്ന കോഴിയെ കേസെടുത്ത് ജയിലിലടച്ച് അമേരിക്കൻ പോലീസ്. വിചിത്രമായ ഒരു സംഭവം.
- ISIS தலைவன் கொல்லப்பட்டான்...வான் தாக்குதலில் வாயை பிளக்க வைத்த அமெரிக்க ராணுவம்
- பீதியை கிளப்பிய 5G ... திடீரென நிறுத்தப்பட்ட இந்திய விமானங்கள்...அமெரிக்காவில் பரபரப்பு