www.garudabazaar.com

ஆஹா.. பிக்பாஸ் சீசன் 5-ல் Wild Card Entry-ல் நுழையப்போகும் பிரபலம் இவரா? தீயாய் பரவும் தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

vijay tv biggbosstamil5 first wild card entry talks deets

புதிய புதிய டாஸ்குகளுடன், போட்டியாளர்கள் முன்பை விட மிகவும் ஆக்ரோஷமாகவும் பரபரப்பாகவும்  விளையாண்டு கொண்டு இருக்கின்றனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து தவிர்த்து 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியிருக்கின்றனர்.

முதலாவதாக நாடியா, அடுத்ததாக அபிஷேக், அவரைத் தொடர்ந்து சின்னப்பொண்ணு ஆகியோர் அடுத்தடுத்து எலிமினேட் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது பொம்மை டாஸ்க் நடந்து முடிந்திருக்கிறது. அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் செய்யப்பட்ட நாமினேஷனின் அடிப்படையில் போட்டியாளர்களுக்கு சர்ச்சைக்குரிய விருதுகள் வழங்கப்பட்டு அவர்களின் குணாதிசயங்கள் சக போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இந்த முறை வரப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த லிஸ்டில் இரண்டு பேரின் பெயர்கள் பேசப்படுகின்றன. முதலாவதாக நடிகர் சஞ்சீவ். தளபதி விஜயின் நண்பரான இவர், தளபதி விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

சீரியல் நாயகனாகவும், தொகுப்பாளராகவும் பல முகங்களைக் கொண்ட சஞ்சீவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் நுழைவார் என்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அவரிடம் நடந்து முடிந்து கொண்டிருக்கின்றன என்றும் பேசப்பட்டு வருகிறது.

எனினும் இதன் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதேபோல் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவும் பேச்சளவில் தான் இருக்கிறது.

நடிகை ரச்சித்தா மகாலட்சுமி அண்மையில்தான், விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்து விலகினார். ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து சில திரைப் பட வாய்ப்புகளும் அவருக்கு வருவதாக கூறப்படுகிறது.

ஆஹா.. பிக்பாஸ் சீசன் 5-ல் WILD CARD ENTRY-ல் நுழையப்போகும் பிரபலம் இவரா? தீயாய் பரவும் தகவல்கள்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv biggbosstamil5 first wild card entry talks deets

People looking for online information on BiggBossTamil5, Rachitha Mahalakshmi, Sanjeev, VijayTelevision, Vijaytv will find this news story useful.