www.garudabazaar.com

"தாமரைக்கும் எல்லாம் தெரியும்.. Game-ஐயே கரைச்சு குடிச்சவங்க!".. சின்னப்பொண்ணு பளீர் பேச்சு! Exclusive Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்திருந்தனர்.  இவர்களில் முக்கியமானவர் தான் பாடகி சின்னப்பொண்ணு. தமிழ்த் திரையுலகில் தனக்கே உரிய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி பிரபலமானவர் சின்னப்பொண்ணு.

is thamarai really innocent chinnaponnu exclusive answer video

உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் சின்னப்பொண்ணுவின் நாட்டுப்புற பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. திரைப் பாடல்களை தவிர்த்து பல்வேறு தனி பாடல்களாகவும் சின்னப்பொண்ணுவின் நாட்டுப்புற பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னபொண்ணு தொடக்கத்தில் ஆக்டிவாக விளையாடினார். ஆனால் போகப்போக சரிவர பங்களிப்பை தர முடியாமல் இருந்ததாக போட்டியாளர்களால் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வந்தார். எனினும தாமரை தொடங்கி சிலருடன் சின்ன பொண்ணுவுக்கு முரண்கள் எழுந்தன.

குறிப்பாக சின்னப்பொண்ணுவிற்கும் அண்ணாச்சிக்குமான முரண்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் உரசலை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் நாடியா மற்றும் அபிஷேக் ஆகியோரை அடுத்து சின்னப் பொண்ணு பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

எலிமினேட் செய்யப்பட்ட பின்னர், சின்னப்பொண்ணு தற்போது பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை அலசிவரும் தயாரிப்பாளர் ரவீந்தருடனான இந்த பேட்டியில் சின்னப்பொண்ணு,  தாமரை குறித்த கேள்விகளுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அதில் சின்னப்பொண்ணு, “நான் கிராமத்துல இருந்து வந்தாலும் திரைத்துறையில் கிட்டத்தட்ட வருஷமா இருக்கேன். ஆனா எனக்கு தெரியாத நிறைய விஷயங்களை புரிந்துவைத்துள்ளார் தாமரை. சுத்தமான கிராமத்துல இருந்து வந்த படிக்காத பெண் தான் அவர். இருப்பினும் எனக்கு தெரியல.. நான் கிராமத்துல இருந்து வந்தவங்க என்று சொன்னாலும் கூட, ஆனால் எல்லாத்தையும் கரைச்சு குடிச்ச மாதிரி, கேம் புரிந்தும் விளையாடுறாங்க. அவர் தன் முழு ரூபத்தை இன்னும் காட்டாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார். இப்போது இன்னும் சுதாரிப்பாக இருக்காங்க” என பேசியுள்ளார்.

"தாமரைக்கும் எல்லாம் தெரியும்.. GAME-ஐயே கரைச்சு குடிச்சவங்க!".. சின்னப்பொண்ணு பளீர் பேச்சு! EXCLUSIVE VIDEO வீடியோ

மேலும் செய்திகள்

is thamarai really innocent chinnaponnu exclusive answer video

People looking for online information on BiggBossTamil5, Thamarai Selvi nadagam, Thamarai Selvichinnaponnu exclusive video will find this news story useful.