www.garudabazaar.com

Latest - அந்த ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா மாஸ்டர்?... வைரலாகும் தகவல்... உண்மை இதுதான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

is master to be released in this ott platform ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா மாஸ்டர்

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என விவரம் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி., ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக, மாஸ்டர் படக்குழு படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். மரண மாஸாக இருக்கும் டீசர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வைரல் ஆகி வரும் தகவல் என்னவெனில் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்றும், நெட்பிலிக்ஸ் நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாஸ்டர் படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீசாகும் என்றும், அதற்குப் பிறகு தான் அமேசான் பிரைமில் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Master, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

is master to be released in this ott platform ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா மாஸ்டர்

People looking for online information on Master, Vijay will find this news story useful.