www.garudabazaar.com

சூடான்ல இப்படி ஒரு வெறித்தனமான விஜய் ரசிகரா?.. ட்ரெண்ட் ஆன நீயா நானா நிகழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

Vijay Fan from Sudan participated in Neeya Naana show

Image Credit : vijay television

Also Read | 'தங்கலான்' படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்.. விக்ரம் எடுத்த கலர்ஃபுல்லான போட்டோஸ்.. TRENDING

இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும். மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும். அதே போல, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி ஒருபுறமும், அதே வேளையில் ஜாலியான டாபிக்குகளை கையில் எடுத்து அதனை சுற்றி நடைபெறும் விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

Vijay Fan from Sudan participated in Neeya Naana show

Image Credit : vijay television

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர் கலந்து கொண்ட விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பக்கம் சினிமா நடிகர்களின் ரசிகர்களும் மறுபக்கம் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என இரண்டு தலைப்பில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருந்தது.

Vijay Fan from Sudan participated in Neeya Naana show

Image Credit : vijay television 

இதில் சினிமா ரசிகர்கள் பக்கம் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர் கலந்து கொள்ள இது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தை வியப்படைய வைத்திருந்தது. இது பற்றி அவர் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த அந்த சூடான் ரசிகர், சினிமா எல்லோரும் ஒன்று கூடும் இடமாக உள்ளதாகவும் அதில் சந்தோஷமும் கொண்டாட்டமும் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தான் அதிகமான தமிழ் படங்களை பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட அந்த சூடான் நபர், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Vijay Fan from Sudan participated in Neeya Naana show

Image Credit : vijay television

அதே போல, தமிழ் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என குறிப்பிட்ட அந்த சூடான் ரசிகர் அவரது ஃபோனின் பின் பக்கம் விஜய் படத்தை வைத்துள்ளதையும் நிகழ்ச்சியில் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "மைனஸ் 12 டிகிரி குளிரில் ஷூட்டிங்".. 'LEO' படம் குறித்து மிஷ்கின் வெளியிட்ட வைரல் அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Fan from Sudan participated in Neeya Naana show

People looking for online information on Neeya Naana, Neeya Naana show, Vijay fan will find this news story useful.