வாடிவாசல் வரை .. நாவல் to சினிமா.. புது ரூட்டில் உருவான தமிழ் திரைப்படங்கள்..! ஒரு Tribute
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் இப்போது நாவல்கள் மற்றும் இலக்கிய படைப்புகளை படமாக்கும் போக்கு அதிகமாகி வருகிறது.
நடிகர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற பாண்டவர் அணி… முதலில் சந்தித்தது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக இலக்கிய படைப்புகளை படமாக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. அதை வெற்றிகரமாக மேற்கொண்ட சில இயக்குனர்களையும், அவர்கள் பயன்படுத்திய இலக்கியப் படைப்புகளைப் பற்றிய ஒரு பார்வை.
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். நல்ல கதைகளை ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக படமாக்குவதில் வல்லவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது சமீபகாலப் படங்களுக்கான கதைக்களத்தை தமிழ் நாவல்களில் இருந்து எடுத்து வருகிறார் வெற்றிமாறன். அவரின் விசாரணை எழுத்தாளர் மு சந்திரகுமாரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட லாக்கப் என்ற புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.
அதே போல வெற்றிமாறனின் அசுரன் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலில் இருந்து தழுவி அமைக்கப்படது. இப்போது அவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிவரும் விடுதலை திரைப்படமும் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற படைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது. அதே போல அடுத்து அவர் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படமும் எழுத்தாளர் சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது. வாடிவாசல் நாவல் தமிழ் சினிமாவின் கிளாசிக் நாவல்களில் ஒன்றாக வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து தமிழ் நாவல்களைப் படமாக்கி அதில் வெற்றியும் பெற்றுவருகிறார் வெற்றிமாறன.
பாலா
இயக்குனர் பாலா தன் இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்திற்காக எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திக் கொண்டார். அதே போல அவர் இயக்கத்தில் உருவாகி வரவேற்பைப் பெற்ற பரதேசி திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்படது. மேலும் அவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலையும் படமாக்கும் முயற்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்தபாலனும் பிற இயக்குனர்களும்
இப்படி சமீபகாலமாக் நாவல்களைப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் வசந்தபாலனும் முக்கியமானவர். அவர் எழுத்தாளர் சு வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலின் ஒரு பகுதியில் இருந்து தன்னுடைய அரவான் படைப்பை உருவாக்கினார். அதுபோல சசி தன்னுடைய பூ படத்தை எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் என்ற சிறுகதையில் இருந்து உருவாக்கினார்.
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் அவரின் அதே பெயரிலான நாவலில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டது. அதுபோல நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவல் மகிழ்ச்சி என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இப்படி சமீபகாலமாக மூத்த மற்றும் இளம் இயக்குனர்கள் அதிகமாக தமிழ் நாவல்களில் இருந்து தங்கள் படைப்புகளுக்கான கதைக்களத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
முன்னோடியாக மகேந்திரன்
இந்த விஷயத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர் தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன்தான். மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற கதையில் இருந்தும், முள்ளும் மலரும் அதே பெயரில் வெளியான நாவலை தழுவியும் உருவாக்கப்பட்டது. அதுபோலவே அவரின் சாசனம் திரைப்படம் எழுத்தாளர் கந்தர்வனின் கதையில் இருந்து உருவாக்கப்பட்டது.
“7 வருஷத்துக்கு அப்புறம் வர்றேன்”… சூப்பர் அப்டேட் கொடுத்த பிரேமம் இயக்குனர்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suriya's Jai Bhim Fame Joshika's Instagram Video Melts Hearts
- Suriya Vetrimaaran Vaadivaasal Test Shoot Trending
- Suriya Vetrimaaran Vaadivaasal Test Shoot Trending
- Actor Soori Visited Suriya And Vetrimaaran's Vaadivaasal Test Shoot; Viral Pic
- Vetrimaaran Suriya Vaadi Vaasal Movie Latest Update
- Vetrimaaran Suriya Vaadi Vaasal Movie Latest Update
- Actor Soori Visited Vaadivaasal Test Shoot Viral Pic
- Suriya Love For Disable Talented Fan Won Hearts
- Actor Karunas Joins The Team Of Suriya Vetrimaaran Vaadi Vaasal Movie
- Actor Karunas Joining To Suriya Vetrimaaran Vaadi Vaasal Team
- Dream Come True Moment For Aadhya Prasad With ET Suriya
- Actor Suriya Opens Up About Kerala Actress Molestation Case
தொடர்புடைய இணைப்புகள்
- "இருட்டை ரசிப்பவர்.. முகமூடி இல்லாத..." Mysskin-ஐ வர்ணித்த Anchor! விழுந்து விழுந்து சிரித்த வெற்றி
- Performance-ல REAL-ஆ வே அடிச்சிட்டாரு😱Suriya-வ உள்வாங்கி பிச்சு உதறிய Azhar🔥Pulsating Performance
- என்னது நான் National Crush-ஆ? 😂🤣 ஆளவிடுங்க சாமி என Fun பண்ணிய Shankar மகள் Aditi
- AJITH பக்தரான RK சுரேஷ் .. AK -ன்னா எப்பவுமே MASS #Shorts
- மாற்றுத்திறனாளி ரசிகருக்கு Surprise கொடுத்த Suriya | Etharkkum Thunindhavan
- "Ajith-ஐ வச்சு நான் Publicity தேடுறனா?" RK Suresh Vs Blue Sattai Maaran -ஆவேசப் பேட்டி
- ശാരീരിക പരിമിതികൾ അതിജീവിച്ച് തന്നെ കാണാനെത്തിയ ആരാധകനെ സന്തോഷപൂർവ്വം സ്വീകരിച്ച് നടൻ സൂര്യ
- Gaana Bala Entry-க்கு முன்னாடியே Vetrimaaran இப்படி சொன்னாரு🔥 #StarSinger #Behindwoods #Shorts
- Vaaranam Aayiram പോലെ ഒരു മുഴുനീള Romantic സിനിമ ഇനിയും പ്രതീക്ഷിക്കാമോ ?? 😍❤️ | Surya Opens Up
- മലയാളം സിനിമകളാണ് മറ്റുള്ള Industry-കൾ ഉദാഹരണമായി എടുക്കുന്നത്...| Suriya Opens Up
- ET FDFS 🔥 பட்டாசு வெடித்து தெறிக்க விடும் SURIYA FANS!
- ET FDFS CELEBRATIONS கலை கட்டுதே 🔥 இறங்கி ஆடும் SURIYA FANS💥