www.garudabazaar.com
iTechUS

'AK62' படத்தின் லேட்டஸ்ட்டா வந்த அப்டேட்.. டிவிட்டரில் லைக் செய்த விக்னேஷ் சிவன்! செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் AK62 படத்தின் அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார்.

Ajithkumar AK62 Vignesh Shivan Liked Netflix Tweet

Also Read | "பருத்திவீரன்-னால பணமும் வரல.. சந்தோஷமும் வரல" - உடைக்கும் Bigg Boss சரவணன்

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி உலகளவில்  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

Ajithkumar AK62 Vignesh Shivan Liked Netflix Tweet

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

Ajithkumar AK62 Vignesh Shivan Liked Netflix Tweet

அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று சில நாட்களுக்கு முன்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajithkumar AK62 Vignesh Shivan Liked Netflix Tweet

இந்நிலையில் தற்போது லண்டனில் இருக்கும்  இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த அறிவிப்பை தற்போது டிவிட்டரில் லைக் செய்துள்ளார். இந்த லைக் செய்த விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பக்க ஸ்கிரீன் ஷாட் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Also Read | "இரண்டு மாதிரியான கதைக்களங்கள்".. கமல் பட அப்டேட்.. சுடசுட கொடுத்த Pa. ரஞ்சித்!!

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar AK62 Vignesh Shivan Liked Netflix Tweet

People looking for online information on Ajith Kumar, AK62, Netflix Tweet, Vignesh shivan will find this news story useful.