பிரபல நடிகர் அருண் பாலி மறைவு.. தான் நடித்த கடைசி படம் ரிலீசான அதே நாளில் நடந்தேறிய சோகம்.
முகப்பு > சினிமா செய்திகள்ஆமிர் கான் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான '3 இடியட்ஸ்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் & தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் அருண் பாலி.
புறநகர் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 79.
பாலியின் மகன் அங்குஷ், தனது தந்தை மயஸ்தீனியா கிராவிஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். இது நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையேயான செயலிழப்பால் ஏற்படும் அரிய ஆட்டோ இம்யூன் நோயாகும்.

"என் அப்பா எங்களை விட்டுப் போய்விட்டார். அவர் தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு இரண்டு மூன்று நாட்களாக மனநிலை மாற்றத்தால் அவதிப்பட்டு வந்தார். அவர் கழிப்பறைக்கு செல்ல விரும்புவதாகக் காப்பாளரிடம் கூறினார், வெளியே வந்த பிறகு அவர் உட்கார வேண்டும் என்று கூறினார், அதோடு அவர் உயிர் பிரிந்தது" என மகன் அங்குஷ் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆமிர் கான் நடித்த லால்சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அமிதாப் பச்சன் & ராஷ்மிகா மந்தனா நடித்து இன்று வெளியான குட் பாய் படத்தில் அருண் பாலி நடித்துள்ளது குறிப்படத்தக்கது. மேலும் PK, பர்பி, பாஹி, மன்மார்ஜியான், ஹே ராம், ஏர் லிஃப்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.









