Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

கணவர் ரன்பீர் மடியில் அமர்ந்து நடிகை ஆலியா பட் வளைகாப்பு.. வைரலாகும் குடும்ப போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட்  வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Alia Bhatt Baby Shower Function Ranbir Kapoor Family Photos

Also Read | கமல் நடிப்பில் முழு வீச்சில் இந்தியன்- 2 படப்பிடிப்பு.. DOP ரவி வர்மன் ISC வெளியிட்ட சூப்பர் BTS!

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டில் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் RRR படத்திலும், டார்லிங், பிரம்மாஸ்திரா படங்களிலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆலியா பட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஆலியா பட்டுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் வளைகாப்பு நடந்துள்ளது.

ஆலியா பட் குடும்ப புகைப்படத்தில் ஆலியா பட், அம்மா சோனி ரஸ்தான், அப்பா மகேஷ் பட், சகோதரிகள் ஷாஹீன் மற்றும் பூஜா மற்றும் அத்தை டினா ஆகியோருடன் உள்ளார்.

ரன்பீர் கபூர் குடும்ப புகைப்படத்தில்  ரன்பீரின் அம்மா நீது மற்றும் சகோதரி ரித்திமா, கரிஷ்மா கபூர், நிதாஷா நந்தா, ஸ்வேதா பச்சன், ரீமா ஜெயின், அனிசா மல்ஹோத்ரா மற்றும்  நீலா தேவி ஆகியோர் உள்ளனர்.

 

Also Read | BIGGBOSS: பிக்பாஸ் சீசன் 6-ல போட்டியாளராக பிரபல கமல் பட நடிகையா? செம்ம தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt Baby Shower Function Ranbir Kapoor Family Photos

People looking for online information on Alia Bhatt, Alia Bhatt Baby Shower Function, Ranbir Kapoor, Ranbir Kapoor Family Photos will find this news story useful.