www.garudabazaar.com

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் வாரிசு.. எப்போ? எதுல? செம்ம அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு  (11.01.2023)  திரையரங்குகளில் வெளியானது.

Varisu Movie World Television premiere announcement

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் தற்போது வரை வாரிசு படம் 300+ கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.‌ இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாரிசு படம் பிரபல சன் டிவி சேனலில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Varisu, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Movie World Television premiere announcement

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.