www.garudabazaar.com
www.garudabazaar.com

ஜிவி பிரகாஷ் - எம்.ராஜேஷ் இணையும் 'வணக்கம் டா மாப்ள!'.. பட்டாசாக வெளியான FirstLook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

VanakkamDaMappilei M Rajesh GVPrakash ஜிவிபிரகாஷ் எம்.ராஜேஷ்

சன் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜிவியுடன் அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.

VanakkamDaMappilei M Rajesh GVPrakash ஜிவிபிரகாஷ் எம்.ராஜேஷ்

தேனியைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் ‘வணக்கம்டா மாப்ள’ என்கிற வார்த்தையை டிக் டாக் செயலியில் பயன்படுத்தியதன் மூலம் அந்த வார்த்தை பிரபலமானது. தற்போது அந்த வார்த்தையை டைட்டிலாகக் கொண்ட இந்த படம் வெகுஜன ரசிகர்கள் மற்றும் காமெடி படங்களை விரும்பும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படத் தொடங்கியுள்ளது. அத்துடன் இயக்குநர் ராஜேஷின் படங்களுக்கான ரசிகர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜேஷின் படம் தொடர்பான இந்த அப்டேட்டால் குஷியாகியுள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜேஷ் மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். 

ALSO READ: தனுஷின் 'ஜகமே தந்திரம் வெளியீடு!'.. பிரபல ஓடிடி சேனலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

VanakkamDaMappilei M Rajesh GVPrakash ஜிவிபிரகாஷ் எம்.ராஜேஷ்

People looking for online information on Daniel, Daniel Annie Pope, Firstlook, GV Prakash Kumar, M Rajesh, VanakkamDaMappilei will find this news story useful.