தெலுங்கில் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் தயாரித்து இயக்கி வரும் படம் 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்'. இந்த படத்தை பிரபல நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ராம் பொத்தினேனி, நிதி அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ராஜ் தோட்டா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் வெற்ற பெற வேண்டும் என்று ரசிகர் ஒருவர் திருப்பதி வெங்காடச்சலபதி கோயிலில் மண்டி போட்டபடி ஒவ்வொரு படியாக கஷ்டப்பட்டு மேலே செல்கிறார்.
இந்த வீடியோ ரசிகர்கள் மிக உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர். இதனை பகிர்ந்த சார்மி, என்னை அழ வைத்துவிட்டாய் சந்தீப். நன்றி சொன்னாலும் தகாது. ஐ ஸ்மார்ட் ஷங்கர் படம் வெற்றி பெற முட்டியால் திருப்பதி படியேறியிருக்கிறாய். என்று தெரிவித்துள்ளார்.