www.garudabazaar.com

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போ? வெளியான OFFICIAL அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Valimai Second Single Might Releasing Today Evening

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

Valimai Second Single Might Releasing Today Evening

இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

Valimai Second Single Might Releasing Today Evening

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் அடுத்த சிங்கிள் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சோனி சவுத் மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Valimai Second Single Might Releasing Today Evening

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Second Single Might Releasing Today Evening

People looking for online information on Ajith Kumar, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.