Vilangu Others
www.garudabazaar.com

Valimai: ‘அஜித் சார் Set-ல ஒவ்வொருத்தரையும்..’ ஷாலினியிடம் வியந்து சொன்ன ஹூமா குரேஷி.. பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 18 பிப்ரவரி 2022: அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை' திரைப்படம் 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Valimai Actress Huma Qureshi about Ajith and shalini video

வலிமை படக்குழுவினர்

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள்.

Also Read: ‘வலிமை படத்துல அஜித் சார்க்கு கஷ்டமான ஆக்‌ஷன் Scenes’ - ஹூமா குரேஷி Exclusive பேட்டி

ஹூமா குரேஷி பேட்டி

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் பெண் மைய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹூமா குரேஷி, பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். இதில் ரஜினியுடன் நடித்த காலா திரைப்படம், அஜித்துடன் நடித்திருக்கும் வலிமை திரைப்படம் என நடிகை ஹூமா குரேஷி, இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரஜினி மற்றும் அஜித் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

Valimai Actress Huma Qureshi about Ajith and shalini video

வலிமை திரைப்படம்..

அதில், “வலிமை சவாலான படம். அஜித் சார் சண்டை காட்சிகள் எல்லாவற்றையும் கூட அவரே பண்ணுகிறார். அவர் மிகவும் அமேசிங்கான நபர். அவருக்கு இந்த திரைப்படத்தில் மிகவும் சிரமமான சண்டைக்காட்சிகளே அமைக்கப்பட்டன. எனது சண்டைக் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் விரும்பும்படியாக அமைந்துள்ளன. அது வலிமையான கதாபாத்திரம் என்பதால் இந்த கேரக்டரை பண்ணுவதற்கு ஆர்வமாக இருந்தேன். முதல் நாள் ஷூட்டிங்கில் செட்டை பார்த்ததுமே மிரண்டுபோய்விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Valimai Actress Huma Qureshi about Ajith and shalini video

ஷாலினியுடனான சந்திப்பு..

இதனைத் தொடர்ந்து அஜித்தின் மனைவி ஷாலினியுடனான சந்திப்பு குறித்தும் ஹூமா குரேஷி பேசினார். அப்போது,  “அஜித் சரை முன்னதாக நான் பார்த்ததேயில்லை. பின்னர் அவரை போன்ற பணிவானவரையும் நான் பார்த்ததேயில்லை. ஒருமுறை அஜித்தின் மனைவி ஷாலினி மேடம் செட்டுக்கு வந்தபோது அவரை பார்க்க வாய்ப்பு அமைந்தது. அப்போது மேடம் உங்களை பார்க்க ஆவலாக இருந்தேன். ஏன் என்றால் சார் மிகவும் கனிவானவர். நீங்களும் தான் என ஷாலினியிடம் பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Valimai Actress Huma Qureshi about Ajith and shalini video

ஒவ்வொரையும் மாண்புடன் நடத்தும் அஜித்

மேலும், “அஜித் சார் செட்டில் ஒருவருக்கு நாற்காலி வேண்டும் என்றால் அவர் உடனே விட்டுக்கொடுத்துவிடுவார். அந்த அளவுக்கு சின்ன சின்ன விஷயங்களிலும் அனைவரையும் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருப்பர். நடிகர்கள் சிலர் ஆரம்பத்தில் இருப்படி இருப்பார்கள். ஆனால் அஜித் இப்போதுவரை இப்படி இருக்கிறார். அவருடன் பணிபுரிந்தது எளிமையாக இருந்தது. அவர் ஒவ்வொருவரையும் மரியாதையாக நடத்தினார்.

Valimai Actress Huma Qureshi about Ajith and shalini video

திரைக்காக அஜித் சாரின் வியக்கவைப்பது. அதே சமயம் கேமரா அசிஸ்டண்ட், லைட் பாய், டீ கொடுப்பவர் வரை ஒவ்வொரையும் மாண்புடன் நடத்தும் அஜித்தின் இயல்புக்காகவே ரசிகர்கள் பலர் உள்ளனர் என நான் கருதுகிறேன். அந்த உண்மையான காரணத்துக்காகவே நானும் அவருடைய ரசிகையாக இருக்கிறேன்.”  என்றும் ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

மேலும் வலிமை திரைப்படம் தொடர்பாக ஹூமா குரேஷி பேசும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் குறித்த முழு பேட்டியை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

VALIMAI: ‘அஜித் சார் SET-ல ஒவ்வொருத்தரையும்..’ ஷாலினியிடம் வியந்து சொன்ன ஹூமா குரேஷி.. பேட்டி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Actress Huma Qureshi about Ajith and shalini video

People looking for online information on Ajith Kumar, Huma Qureshi, Huma Qureshi about Ajith, Huma Qureshi about Valimai, Huma Qureshi Byte, Huma Qureshi Interview, Valimai Actress Huma Qureshi will find this news story useful.