www.garudabazaar.com

VALIMAI : "முடிஞ்சா தொட்டுப் பாரு டா.." மிரட்டலான PROMO மூலம் சவால் விடுத்த AK! POWER of GOOD vs POWER of EVIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் FDFSக்கு 6 நாட்களே உள்ள நிலையில் சண்டைக்காட்சி அடங்கிய POWER of GOOD vs POWER of EVIL PROMO வெளியாகி உள்ளது.

Ajith Kumar Valimai FDFS 6 Days to go Terrific Promo Released

முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடிகை தமன்னா! புதிய அவதாரம்!

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Ajith Kumar Valimai FDFS 6 Days to go Terrific Promo Released

வலிமை படத்தின் புதிய முன்னோட்டத்தை நேற்று போனிகபூர் வெளியிட்டு இருந்தார். அந்த முன்னோட்டம் 1.5 மில்லியனை கடந்து படு வைரலாகியது. பின் வெளியான நாங்க வேற மாரி பாடலின் ப்ரோமோ வீடியோவும் 1 மில்லியனை கடந்தது. நேற்றும் புதிய ப்ரோமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டார். படு மாஸ் காட்சிகளோடு, பஸ் சண்டைக்காட்சியோடு அந்த ப்ரோமோ அமைந்தது.

Ajith Kumar Valimai FDFS 6 Days to go Terrific Promo Released

இந்நிலையில் இன்று (18.02.2022) மீண்டும் ஒரு ப்ரோமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டுள்ளார். பஸ், பைக், இரும்பு குண்டு சண்டைக்காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. முடிஞ்சா தொட்டுப் பாரு டா எனும் வசனமும் இடம் பெற்றுள்ளது. POWER of GOOD vs POWER of EVIL என இந்த ப்ரோமோவுக்கு பெயரிட்டுள்ளனர்.

வலிமை படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

Ajith Kumar Valimai FDFS 6 Days to go Terrific Promo Released

வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.

#SK20: 80's Retro கெட்டப்பில் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி! BTS புகைப்படங்களுடன் வைரலாகும் வீடியோ!

VALIMAI : "முடிஞ்சா தொட்டுப் பாரு டா.." மிரட்டலான PROMO மூலம் சவால் விடுத்த AK! POWER OF GOOD VS POWER OF EVIL வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai FDFS 6 Days to go Terrific Promo Released

People looking for online information on Ajith Kumar, அஜித், நிரவ் ஷா, போனிகபூர், வலிமை, Boney kapoor, H Vinoth, Valimai Movie will find this news story useful.