Reliable Software
www.garudabazaar.com

'புரட்சி படைத்த முதல்வர்!'.. 'துணை நின்ற புதல்வர்!'.. சூரி அனல் பறக்கும் வாழ்த்துக்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னிலை வகித்ததுடன்  வெற்றி பெற்றது. 

Soori meets MK Stalin and Udhayanithi Stalin to wish

இதனை அடுத்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது மகனும் இளம் ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் பலரும் வாழ்த்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூரி தமது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளதுடன் மு.க.ஸ்டாலினையும், உதயநிதியையும் நேரில் சந்தித்து பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரி குறிப்பிடும்போது ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டு “புரட்சி படைத்த முதல்வருக்கும் துணைநின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார். அவரது இந்த வாழ்த்துச் செய்தி ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருந்த நிலையில், தேசிய விருது பெற்ற அசுரன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். விடுதலை என்று பெயர் சூட்டப்பட்ட இந்த படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. 

ALSO READ: 'உதயசூரியன் வெளிச்சத்தில் யோகிபாபு, உதயநிதி!.. 'வேற லெவலில்' வாழ்த்து!

தொடர்புடைய இணைப்புகள்

Soori meets MK Stalin and Udhayanithi Stalin to wish

People looking for online information on DMK, MKStalin, Soori, Udhayanidhi Stalin will find this news story useful.