Reliable Software
www.garudabazaar.com

பிரபல ஓடிடியில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படம்! தேதியுடன் வெளியான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

96 படத்தில் ஜானுவாக நடித்த திரிஷா பெருமளவில் பேசப்பட்டார். பின்னர் 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த திரிஷாவை இப்போது மீண்டும் காண அவரது ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

Trisha Paramapadham Vilayattu Hotstar release date

ஆம், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஒரு பரபரப்பான அரசியல் சூழலில் இந்த கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.

Trisha Paramapadham Vilayattu Hotstar release date

திருஞானம் இயக்கி உள்ள இந்த 'பரமபதம் விளையாட்டு' திரிஷாவின் 60 வது திரைப்படம். இத்திரைப்படத்தில் மருத்துவராக நடித்துள்ள திரிஷாவுடன் நந்தா, வேல ராமமூர்த்தி, தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதைத் தொட்டு பல பட்டையை கிளப்பும் அரசியல் வசனங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன.

Trisha Paramapadham Vilayattu Hotstar release date

அதன்படி, ஒரு அரசியல் புள்ளி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் திரிஷா, அரசியல்வாதிகள் பலரை எதிர்கொள்கிறார். அப்போது, ‘நீங்க சொல்றத கேக்க நான் ஒன்னும் உங்க கட்சித் தொண்டன் இல்ல’, ‘அரசியல் ஒரு பரமபதம் விளையாட்டு’ உள்ளிட்ட வசனங்கள் படத்தில் இடம் பெறுகின்றன. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியன் செல்வன்' படத்தில் திரிஷா நடித்துவருகிறார்.

ALSO READ: "பிரபல நடிகைக்கு ரத்த புற்றுநோய்".. அவரது கணவரான பாலிவுட் நடிகரின் நெஞ்சை உருக்கும் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Paramapadham Vilayattu Hotstar release date

People looking for online information on Paramapadham Vilayattu Tamil, Trisha, Trisha Krishnan will find this news story useful.