"இவன் ரொம்ப கேவலமான ஆள் காரணம்"... கொடூரனின் முகத்திரையை கிழித்த டிக்டாக் பிரபலம்...!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த வருடம் நீக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கின் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் எளிய சாதாரண மக்களும் தங்கள் திறமைகளின் மூலம் பெற்ற புகழும் பிரபலமும் மிகையாகாது. அப்படியே டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஹேசல் ஷைனி. தனது கியூட்டான Expression-கள் மூலம் பிரபலம் அடைந்த பிறகுதான் தெரியும் அவர் மைனா, சாட்டை, கும்கி போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் என்பதே.
![tiktok hazel shiny post about a online abuser மோசமான நபரை கிழித்த டிக்டாக் பிரபலம் tiktok hazel shiny post about a online abuser மோசமான நபரை கிழித்த டிக்டாக் பிரபலம்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/tiktok-hazel-shiny-post-about-a-online-abuser-news-1.jpg)
இந்நிலையில் டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு இன்ஸ்ட்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அவரை லட்சக்கணக்கான மக்கள் பாலோ செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான நபரை பற்றி அவர் வெளிப்படுத்தினார். பெண் பிரபலங்கள் மற்றும் நடிகைகளை மிகவும் மோசமாக சித்தரித்து மீம்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வந்த நபரின் id-யை வெளிப்படுத்தி அவர் "இவன் ஒரு கேவலமான ஆள். சிறிய வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோசமாக சித்தரித்து அவன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறான். அனைவரும் அவனது இந்த பேஜ்ஜை ரிப்போர்ட் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பெண்களுக்கு அச்சுறுத்தலான நபர்களை தைரியமாக வெளிப்படுத்திய ஹேசல் ஷைனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
"இவன் ரொம்ப கேவலமான ஆள் காரணம்"... கொடூரனின் முகத்திரையை கிழித்த டிக்டாக் பிரபலம்...! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- VIDEO: "Fake IDs வெச்சி ரொம்ப கேவலமா… நீங்க எனக்கு Help பண்ணனும்" - Hazel Shiny காட்டம்
- Pathetic: யாருனே தெரியாதவங்க இவ்ளோ சந்தோஷப்படுறாங்க - Prabhu Solomon மகள் Hazel Shiny
- Ritika-வை கிண்டலடித்த Netizens. Shiny, Prabhu Solomon மகள் அதிரடி | 96' Gouri, BodyShaming
- அடுத்தவங்க ஆள Correct பண்ற வேலைய நான் பாக்க மாட்டேன்- கிழிக்கும் பிரபல இயக்குனர் மகள் I Hazel Shiny