Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

"டான்" படத்தின் டப்பிங்கை முடித்த பிரபல நடிகர்! வேற லெவல் மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

This Famous Actor Finish His Dubbing For Don Movie

விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் வரும் தீபாவளிக்கு சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

This Famous Actor Finish His Dubbing For Don Movie

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிக்கும் அடுத்த படம் டான். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

This Famous Actor Finish His Dubbing For Don Movie

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார்.

This Famous Actor Finish His Dubbing For Don Movie

சில தினங்களுக்கு முன் டான் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன் நடிகர் S J சூர்யா, தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நடித்து முடித்துவிட்டதாக இயக்குனர் சிபி டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் சூரி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார், என இயக்குனர் சிபி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

This Famous Actor Finish His Dubbing For Don Movie

விரைவில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் முன்பே இயக்குனர் சிபி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

This Famous Actor Finish His Dubbing For Don Movie

People looking for online information on Cibi, Don, Priyanka Mohan, Sivakarthikeyan, Soori will find this news story useful.