Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'அந்தகன்' படத்திலிருந்து விலகும் இயக்குனர்... அவரே வெளியிட்ட திடீர் பதிவு... என்ன நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு  வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன்  3 தேசிய விருதுகளையும் வென்றது.

this director is not directing andhagan 'அந்தகன்' படத்திலிருந்து விலகும் இயக்குனர்

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க இருந்தார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் எடையை குறைத்து தயாராகி வந்தார்.

முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. 'அந்தாதூன்' படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில்  தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன்,  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அப்படத்தில் ஷுட்டிங் இன்று துவங்கி உள்ளது.

this director is not directing andhagan 'அந்தகன்' படத்திலிருந்து விலகும் இயக்குனர்

இந்நிலையில் இந்த படத்தை இயக்குவதாக இருந்த இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் தற்போது தனது டிவிட்டர் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவு எதற்கென்றால் நான் 'அந்தகன்' படத்தை இயக்கவில்லை என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. எனது அடுத்த படம் பற்றி விரைவில் அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.

Tags : Prashanth

this director is not directing andhagan 'அந்தகன்' படத்திலிருந்து விலகும் இயக்குனர்

People looking for online information on Prashanth will find this news story useful.