Reliable Software
www.garudabazaar.com

Video: "இவன் ஆக்‌ஷன் ஹீரோவா ஆயிடுவான்!".. காமெடி சரவெடியில் தண்ணி வண்டி டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தண்ணி வண்டி. அறிமுக இயக்குநர் மாணிக்க வித்யா இந்த படத்தில் உமாபதியுடன் சேர்ந்து ‘வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.

Thanne Vandi Trailer Umapathy Thambi Ramaiah தண்ணி வண்டி

இந்த படத்தில் நாயகன் உமாபதியின் அப்பாவாக  தம்பி ராமையா நடித்துள்ளார். இவர்களுடம் தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் தற்போது Behindwoods-ல் வெளியாகியுள்ளது.  உமாபதி-பாலசரவணனின் காமெடி காம்போவில் உருவாகியிருக்கிறது படம். இதன் ஒரு காட்சியில் தம்பி ராமையா, ‘இவன் ஆக்‌ஷன் ஹீரோவா ஆயிடுவான். நம்மளே சொல்லிட வேண்டியதான்’ என வசனம் பேசுகிறார். ரியலாகவும் தமது மகனை குறிப்பிட்டு சொல்வது போல் அந்த காட்சி வந்துள்ளது. மொத்தத்தில் டிரெய்லரை பார்க்கும்போது படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

Thanne Vandi Trailer Umapathy Thambi Ramaiah தண்ணி வண்டி

இப்படத்தின் ஒளிப்பதிவினை வெங்கட் கவனித்துக்கொள்ள மோகன்ராஜ், கவிஞர் சாரதி,  கதிர் மொழி பாடல்களை எழுதியுள்ளன. ஜி சரவணனின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது படைப்பாக தயாரித்துள்ளது.

VIDEO: "இவன் ஆக்‌ஷன் ஹீரோவா ஆயிடுவான்!".. காமெடி சரவெடியில் தண்ணி வண்டி டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thanne Vandi Trailer Umapathy Thambi Ramaiah தண்ணி வண்டி

People looking for online information on Bala Saravanan, Samskruthy Shenoy, ThanniVandi, Trailer, Umapathy will find this news story useful.