www.garudabazaar.com

தாமரை அக்கா எல்லாம் தெரியும்.. நடிக்காதீங்க.. பிரபல போட்டியாளர் போட்ட மார்க்! BBUltimateTamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltimate:- பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளும் நாளும் பல புதிய புரோமோக்கள் வெளியாகின்றன.

thamarai akka dont act contestant mark BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட்

இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வெர்ஷனில் சச்சரவுகள், டாஸ்குகள், வாதங்கள் எல்லாம் சற்று தாமதமாக தொடங்கும். எனினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் எல்லாமே சற்று சீக்கிரம் தொடங்கிவிட்டதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு காரணம் தொடர்ச்சியாக பல சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்து போட்டியாளர்களும் ஓரளவுக்கு தயாராகி இருப்பார்கள் என்பதுதான். அப்படித்தான் இப்போது பிக்பாஸ் ஓடிடி பிளாட்பார்மில் நடக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும், ஏற்கனவே நடந்து முடிந்த முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

Also Read: காப்பித்தூளை எடுத்து வெச்சுக்குறீங்க.. கேவலமா இருக்கு.. முட்டிய சண்டை.. முடிவுதான் அல்டிமேட்..

தொடங்கிய நாமினேஷன்

எனினும் இவர்களின் வியூகங்கள் புதிதாக இருக்கும், விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நாமினேஷன் ப்ராசஸ் வைக்கப்பட்டது. 

இதில் பங்கேற்றிருக்கும் நிரூப், இதே நிகழ்ச்சியின் போட்டியாளரான அபிராமி தன்னுடைய முன்னாள் காதலி என்றும் குறிப்பிட்டு அதிரவைத்தார். இதனை தொடர்ந்து தான் பார்த்த அபிராமி போல் தற்போது அவர் இல்லை என்று குறிப்பிட்டதுடன், நிரூப் அபிராமியை நாமினேட்டும் செய்திருந்தார்.

கேப்டன்சி ரிப்போர்ட்

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரும் தற்போதைய கேப்டனுமான ஷாரிக் ஹாசன், பிக்பாஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தனது முதல் கேப்டன்சி ரிப்போர்ட்டை கொடுத்தார். அதில்தான் அபிராமியை அதிகம் கோபப்பட வேண்டாம் என்றும், சுரேஷ் தாத்தா வீட்டில் நன்றாக கொளுத்தி போட்டு கலகலப்பாக வைத்திருக்கிறார் என்றும் ஷாரிக் ஹாசன் குறிப்பிட்டார்.

தாமரை அக்கா நடிக்காதீங்க

மேலும் வனிதாவின் கோபம் மற்றவைகளை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அப்படி பேசியவர் தாமரை செல்வியை பார்த்து, “அக்கா நீங்கள் நல்ல பிளேயர்.

உங்களுக்கு நல்ல மார்க் தான் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கு எல்லாமே தெரியும். எல்லாமே புரிந்து கொண்டுதான் விளையாடுகிறீர்கள். நீங்கள் நடிக்காதீர்கள்!” என்று நேரடியாக கூறினார்.

5வது சீசன் தாமரை செல்வி

நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி, பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டவர். இந்த சீசனில் கிட்டத்தட்ட தாமரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உண்டு என்று பல ரசிகர்கள் கருதி வந்தனர்.

தாமரையின் எலிமினேஷன் நடக்கும்போது கூட நடிகர் கமல்ஹாசன், தாமரை இருந்திருப்பார் என்று தான் கருதியதாகவும் தாமரையின் வெளியேற்றம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரச்சனையே இல்லனு பிரச்சனை ஆக்குறீங்களா பிக்பாஸ்? - அழுது கொந்தளித்த வனிதா.. வெளியான பரபரப்பு ஆடியோ ..

தொடர்புடைய இணைப்புகள்

thamarai akka dont act contestant mark BiggBoss Ultimate

People looking for online information on BBUltimate, BBUltimateTamil, BiggBossUltimate, BiggBossUltimateTamil, Disney Hotstar Tamil, Thamarai, Vanitha will find this news story useful.