ET Others
www.garudabazaar.com

THALAPATHY66 : தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் புதிய படம்! ஷூட்டிங் எப்போ? எங்க? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 66 shooting starts at Gokulam Studios chennai

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள், Single பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 66 shooting starts at Gokulam Studios chennai

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. ஊடகவியலாளர் சந்திப்பில், நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிபடுத்தினார்.

இந்த படத்தில் பணிபுரிவது பற்றி சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் சூசகமாக அறிவித்தார். அதே போல் எடிட்டராக பிரவீன் கே எல் பணிபுரிவதாக செய்திகள் வந்தன. மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 66 shooting starts at Gokulam Studios chennai

இந்நிலையில் தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் காட்சிக்கு மிகப்பெரிய செட்டில் விஜய் & ரஷ்மிகா மந்தனா நடனத்துடன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்றைய தினம் உகாதி, தில்ராஜூ தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் அந்த தேதியை தேர்வு செய்து தொடங்குகிறார்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 66 shooting starts at Gokulam Studios chennai

People looking for online information on Gokulam Studios, Rashmika Mandanna, Thalapathy66, Vamsi, Vijay, Vijay66 will find this news story useful.