www.garudabazaar.com

"கெட்ட பழக்கம் அளவா இருக்கணும்" - நகைச்சுவை கலைஞர் கோவை குணா மரணம்.. மதன் பாப் வேதனை பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக மக்களிடையே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழடைந்தவர் கோவை குணா. ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

television actor Kovai Guna dead Madhan Bob Emotional talk

இதனை தொடர்ந்து குணா ‘சென்னை காதல்’ எனும் படத்திலும் நடித்திருந்தார். ஸ்டான்ட் அப் காமெடியாக இருந்தாலும் சரி, மிமிக்ரியாக இருந்தாலும் சரி குணா சில வினாடிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுபவர். கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் குரலில் பேசி பல்லாயிரக்கணக்கான மக்களை ரசிகர்களாக பெற்றவர். இந்நிலையில் உடல்நிலை நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் குணா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த கோவை குணா மரணமடைந்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சன் டிவி அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவரும் நகைச்சுவை நடிகருமான நடிகர் மதன் பாப் கோவை குணா பற்றி பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேகமான நினைவுகளை உருக்கமாக பேசியுள்ளார். 

அதில், “கோவை குணாவுடைய மரணம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தெரியும். ஆலள் ஜம்முன்னு இருப்பார். கோட் சூட் போட்டுக் கொண்டு வந்தார் என்றால் அப்படி பெஃர்பாம் பண்ணுவார். அவருடைய நிகழ்வுகள் அனைத்திலும் நான் நடுவராக இருந்தேன். அதன் பிறகு நானும் அந்த நிகழ்ச்சியை தயாரித்தேன். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களிலேயே அவர் நம்பர் ஒன் டேலண்ட். இன்றைக்கு பலரும் பண்ணும் கவுண்டமணி டான்ஸ் உள்ளிட்ட பலவற்றை அவர்தான் முதலில் செய்தார். மிமிக்ரி மட்டுமல்லாது, சொந்தமாக நகைச்சுவைகளை செய்வார். தத்ரூபமாக எளிமையான கதாபாத்திரங்களை அப்படியே பெஃர்பாம் பண்ணி காட்டுவார்.

television actor Kovai Guna dead Madhan Bob Emotional talk

அதன் பிறகு என்னுடைய நண்பர் எடுத்த திரைப்படத்தில் இவரை நான் பரிந்துரைத்தேன். நான் நடிக்க வேண்டிய திரைப்படம் தான். எனக்கு தேதிகள் இல்லை என்பதால் இவரை பரிந்துரைத்தேன். இவரை அவர்களுக்கு பிடித்தது. அவர்களும் இவருடைய நடிப்பை பிடித்து போய் நல்ல சம்பளம் கொடுத்தனர். தினமும் நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனாலும் நான் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் சொல்வது இதுதான். கெட்ட பழக்கங்கள் அளவோடு இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் படகு செல்லும். ஆனால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஒன்று பண்ண முடியாது. அப்படித்தான் அளவுக்கு அதிகமாக கெட்ட பழக்கம் இருந்தால், அது மிகவும் மோசமானது; இந்த நேரத்தில் இதை நான் பேசக்கூடாது, இருப்பினும் இதை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இண்டஸ்ட்ரியில் நிறைய பேர் இப்படி காலமாகிறார்கள். அதில் பலரையும் இப்படியான கெட்ட பழக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. கோவை குணா அவ்வளவு பெரிய திறமை வாய்ந்தவர்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

"கெட்ட பழக்கம் அளவா இருக்கணும்" - நகைச்சுவை கலைஞர் கோவை குணா மரணம்.. மதன் பாப் வேதனை பேட்டி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

television actor Kovai Guna dead Madhan Bob Emotional talk

People looking for online information on Actor Kovai Guna Passed away, Asatha Povathu Yaru, Kalakka Povathu Yaru, Kovai Guna, Television actor Kovai Guna will find this news story useful.