Annatha Others ua
www.garudabazaar.com

Breaking: டாப்ஸிக்காக பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை சமந்தா! வெளியான செம சூப்பரான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

Tapsee to Produce A Bollywood Film with Samantha as a lead

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார்.

Tapsee to Produce A Bollywood Film with Samantha as a lead

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடிக்க பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் Women Centric படமாக உருவாக உள்ள பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tapsee to Produce A Bollywood Film with Samantha as a lead

நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Tapsee to Produce A Bollywood Film with Samantha as a lead

People looking for online information on Samantha, Tapsee will find this news story useful.