LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலில் நடிகை தமன்னா.. அரளிப்பூ, தேங்காய் சாற்றி வழிபாடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு சென்றுள்ளார்.

Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak Temple

Also Read | கோப்ரா படத்தின் திருச்சி நிகழ்ச்சி..ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விக்ரம் செல்ஃபி!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் நவாசுதீன் சித்திக் உடன் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak Temple

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.  சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது. வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak Temple

மேலும் பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கதையாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak Temple

இந்நிலையில் இந்த பப்ளி பவுன்சர் படத்தின் இயக்குனர் மதுர் பண்டர்க்கர் உடன் தமன்னா மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பிள்ளையாருக்கு அரளிப்பூ, தேங்காய் சாற்றி வழிபாடு செய்தார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பாட்டியா பகிர்ந்துள்ளார்.

Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak Temple

Also Read | ஜெர்மனி டூர் முடிஞ்சது.. அடுத்து ஐரோப்பாவில் இந்த நாடு தான்! பிரியா பவானி சங்கர் பகிர்ந்த PHOTOS!

Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak Temple

People looking for online information on Tamannaah Bhatia, Tamannaah Bhatia Visit Mumbai Siddhi Vinayak will find this news story useful.