Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

“பெரிய Expectations” .. அண்ணாத்த FDFS-க்கு வந்த லோகேஷ் கனகராஜ் வைரல் பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி வெளியீடாக நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’.

Lokesh Kanagaraj on Annaatthe FDFS viral byte video

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியின் மாமன் மகள்களாக, மீனா மற்றும் குஷ்பு நடித்துள்ளனர்.

ரஜினியுடன் நயன்தாரா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இதில் தமிழகத்திலும் ரசிகர்கள் அதிகாலை ஷோவை சென்று கூட்டம் கூட்டமாக பார்த்தனர்.

அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சாண்டி மாஸ்டர், நடிகை குஷ்பு பலரும் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தனர். இதில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் படம் என்பதால், அனைவரை போலவே தனக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாகவும், அதனால் படம் பார்க்க வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாநகர, கைதி படங்களின் வெற்றிகளுக்கு பின், தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிக்கும் விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

“பெரிய EXPECTATIONS” .. அண்ணாத்த FDFS-க்கு வந்த லோகேஷ் கனகராஜ் வைரல் பேட்டி! வீடியோ

Lokesh Kanagaraj on Annaatthe FDFS viral byte video

People looking for online information on AnnaattheFDFS AnnaattheDeepavaliAnnaattheReview Rajinikanth, Lokesh Kanagaraj, Rajinikanth will find this news story useful.