‘மூடர்கூடம்’ நவீனின் அடுத்த படம்… டீசரை வெளியிடும் பிரபல நடிகர்… வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

Suriya will launch Agni Siragugal movie teaser

Also Read | “விஷ்ணு படத்துல சேர்ந்து பாடிய ஹிட் Song”… விஜய் அம்மா ஷோபாவின் இந்த வார குட்டி ஸ்டோரி!

மூடர்கூடம்…

‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் நவீன். அந்த படத்தில் அவரே முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வித்தியாசமான உருவாக்கம் காரணமாக வெகுவாக பாராட்டுகளைக் குவித்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய ‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’ என்ற படத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இடையில் சமுத்திரக்கனி நடிப்பில் ‘கொளஞ்சி’ என்ற படத்தையும் தயாரித்தார்.

Suriya will launch Agni Siragugal movie teaser

அக்னிசிறகுகள்…

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இயக்குனர் நவீன், அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர். மற்ற முக்கிய வேடங்களில்  அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

Suriya will launch Agni Siragugal movie teaser

படப்பிடிப்பு…

இந்த படம் 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.  ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தின் ஷூட்டிங்  பணிகள் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி பகுதியில் படமாக்கினார் இயக்குனர் நவீன். கஜகஸ்தானில் படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் அக்னி சிறகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya will launch Agni Siragugal movie teaser

டீசரை வெளியிடும் சூர்யா…

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு டீசரை சூர்யா வெளியிட உள்ள நிலையில் இயக்குனர் நவீன் பகிர்ந்துள்ள டிவீட்டில் “வாழ்க்கையோட பெரும்பாலான விடியல்கள் வழக்கமானதாவே இருக்கு. நாளைய என் விடியல் என்னவா வேணா இருக்கலாம். ஆனா கண்டிப்பா வழக்கமானதல்ல! It’s a honour!. சூர்யா சார் அக்னி சிறகுகள் டீசரை வெளியிடுகிறார்” என்று அறிவித்துள்ளார்.

Also Read | #Suriya41 “மீண்டும் set-க்கு செல்ல காத்திருக்கிறேன்”… இயக்குனர் பாலாவோடு சூர்யா –Viral BTS Pic

தொடர்புடைய இணைப்புகள்

Suriya will launch Agni Siragugal movie teaser

People looking for online information on Agni Siragugal movie, Agni Siragugal movie teaser, Suriya will find this news story useful.