www.garudabazaar.com

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் முதல் சிங்கிள்! பின்னணி பாடகி பகிர்ந்த அப்டேட்! ! வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிக்கும் 39வது படத்தினை சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.

suriya starring jai bhim movie first single update

இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடியின மக்களின் பின்னணியில் வழக்கறிஞராக சூர்யா நிற்பதுபோல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக சூர்யா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

suriya starring jai bhim movie first single update

இந்த படத்தை 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல்  இயக்கி உள்ளார். அகரம் பவுண்டேஷனின் மிக முக்கிய வழிகாட்டல் குழு பொறுப்பில் உள்ளவர் தான் தா‌.செ ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா உடன்  'கர்ணன்' ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

suriya starring jai bhim movie first single update

இந்நிலையில் நமது Behindwoods சேனலுக்கு பாடகி நிரஞ்சனா ரமணன் கொடுத்த பேட்டியில் ஜெய் பீம் படத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளில் பாடல் பாடியதாகவும், அந்த பாடல் சிங்கிளாக இன்னும் ஒரிரு வாரங்களில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இவர் டாக்டர் படத்தின் SOUL OF DOCTOR தீம் பாடலை பாடியவர் ஆவார்.

suriya starring jai bhim movie first single update

இந்த படம் அமேசான் பிரைமில் தீபாவளிக்கு வெளியாகிறது.

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் முதல் சிங்கிள்! பின்னணி பாடகி பகிர்ந்த அப்டேட்! ! வீடியோ! வீடியோ

suriya starring jai bhim movie first single update

People looking for online information on Jai Bhim, Niranjana Ramanan, Sean Rolden, Suriya will find this news story useful.