சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தர்பார்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

Superstar Rajinikanth Participate his first television Show into the Man Vs Wild with Bear Grylls

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் Man Vs Wild நிகழ்ச்சியில் Bear Grylls என்ற சாகஸவீரருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.

இந்நிலையில் இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரஜினிகாந்த்தை அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சின்னத்திரைக்கு அவரை முதன் முதலாக அழைத்து வருவதில் பெருமை கொள்கிறது.

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்தும் வகையில் சூப்பர்ஸ்டார்  இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் . நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்.

Bear Grylls கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது.  அவருடைய எளிமை, பொறுமை,  பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்” என்றார்.

Entertainment sub editor