சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் கணவர் யார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படங்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த வருடம் நீக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கின் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் எளிய சாதாரண மக்களும் தங்கள் திறமைகளின் மூலம் பெற்ற புகழும் பிரபலமும் மிகையாகாது. அப்படியே டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் கேப்ரியல்லா. இவர் 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பலரது கவனத்தை ஈர்த்தார். எனினும் கேப்ரியல்லா என்று சொன்னாலே பலருக்கும் ஞாபகம் வருவது அவரது கடிதாசி டிக்டாக்குகள் தான்.

பல உறவுகளுக்கும் கடிதங்கள் மூலம் அவர் கொடுக்கும் உருக்கமான மெசேஜ்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அதன்பிறகு டிக்டாக்கில் இருந்து சினிமாவிற்குள் வந்தார் கேப்ரியல்லா. முதல் படமே நயன்தாராவின் இளைய வயது கேரக்டராக ஐரா என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு 'செத்தும் ஆயிரம் பொன்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற புதிய தொடரில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஒரு சாதாரண கிராமத்து பெண் எப்படி தனது லட்சியங்களுக்காக போராடுகிறாள் என்ற கதை கருவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகிகேப்ரியல்லாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தனது கணவருடன் அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ..!