www.garudabazaar.com

Chandralekha : "9th படிக்கும்போது ஆரம்பிச்சாங்க".. 2304 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்த பிரபல சீரியல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பலவும், பலருக்கும் முன்னணி மற்றும் ஃபேவ்ரைட் சீரியலாக விளங்குவது உண்டு.

sun tv long time serial Chandralekha ends with 2304 Episodes

Also Read | Bigg boss 6 tamil : "பாலாஜி மாரியே இருக்காருப்பா".. ராபர்ட் அடித்த கமெண்ட்.. கடுப்பான போட்டியாளர்.?

பொதுவாகவே சீரியல்களின் தன்மை, வரவேற்பு உள்ளிட்ட பலவற்றையும் பொறுத்து, ஒரு சீரியல் பல எபிசோடுகளாக ஒளிபரப்பாகும். அதிலும் 500 எபிசோடுகள், 1000 எபிசோடுகள் எல்லாம் கடந்துவிட்டால், அந்த சீரியல் மக்கள் மனதில் சற்றே வலுவாக இடம் பிடித்த சீரியலாகிவிடுகிறது. அப்படி 2000-க்கும் அதிகமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது சந்திரலேகா சீரியல்.

ஆம், சன் டிவியில் கடந்த 2014-ஆம் ஆண்டுவாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களுள் அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான இன்னொருமொரு சீரியலாக உருவெடுத்துள்ளது. 2014-ஆம் ஆண்டு வரை 2022 அக்டோபர் முதல் வாரம் வரையில் 2304 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியல் நிறைவடைந்துள்ளது.

sun tv long time serial Chandralekha ends with 2304 Episodes

இதை பார்த்த பெண்கள் பலரும், ‘நான் 9வது படிக்கும்போது தொடங்கப்பட்ட சீரியல், இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிவிட்டேன்’ என்றும், ஆண்கள் சிலர், ‘நான் பள்ளிப் படிப்பின்போது ஒளிபரப்பான சீரியல் இப்போது டிகிரி முடித்து திருமணமே பண்ணிவிட்டேன்’ என்றும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர், ‘திருமணம் ஆகும் முன்பு தொடங்கப்பட்ட சீரியல், இப்போது குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர்’ என்றும் கூறியுள்ளனர்.

sun tv long time serial Chandralekha ends with 2304 Episodes

சீரியல்கள் எப்போதும் மக்களின் டைம்லைனுடன் இணைந்தே இருப்பன. ஒரு காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் பல அம்சங்களில், அந்த காலக்கட்டத்தில் ஒளிபரப்பான புகழ்பெற்ற சீரியலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சுமார் 8 வருடத்துக்கும் மேலாக ஒளிபரப்பான சந்திரலேகா சிரீயல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறித்து ரசிகர்களும் சரி, அந்த சீரியலில் பணிபுரிந்தவர்களும் சரி நெகிழ்ந்துள்ளனர்.

Also Read | Surya42 : கோவாவில் நடந்து வந்த சிறுத்தை சிவா - சூர்யா பட ஷூட்டிங். .. வெளியான அடுத்த அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

sun tv long time serial Chandralekha ends with 2304 Episodes

People looking for online information on Chandralekha, Chandralekha serial ends, Sun TV Serial, Sun Tv Serial Chandralekha will find this news story useful.