www.garudabazaar.com

பாவாடை தாவணியில் ராஷ்மிகா... ஸ்டைலிஷ் கார்த்தி... சுல்தான் பட போஸ்டர் வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த படம் 'ரெமோ'. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.  முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலங்களை ஒன்று சேர்த்து அந்த படத்தை முடித்து காட்டினார்.

sultan karthi special poster released சுல்தான் பட போஸ்டர் வெளியானது

எனவே இதனை அடுத்து தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தீபாவளி பரிசாக சுல்தான் படக்குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பாவாடை தாவணியில் ராஷ்மிகவுடன், கார்த்தி அமர்ந்திருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags : Sultan, Karthi

தொடர்புடைய இணைப்புகள்

sultan karthi special poster released சுல்தான் பட போஸ்டர் வெளியானது

People looking for online information on Karthi, Sultan will find this news story useful.