Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"மீண்டும் STR-ARR-GVM காம்போ!".. இந்த மூன்றெழுத்து Titleக்கும் ஜோதிகாவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் பாவக்கதைகள் படத்தின் ஒரு பகுதியை கவுதம் மேனன் இயக்கியிருந்த நிலையில், தற்போது சிம்புவுடன் இணையும் ஒரு புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

STR ARR GVM Combo Nadhigalilae Neeradum Suriyan சிம்பு

நடிகர் சிம்பு மீண்டும் தமது உடல் எடையைக் குறைத்து ஃபார்முக்கு வந்துள்ளார். அவர் நடித்த ஈஸ்வரன் படம் அண்மையில் வெளியாகியது. தவிர மாநாடு படத்தில் சிம்பு நடித்து வரும் நிலையில், தற்போது சிம்பு மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் படத்துக்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பிடப்பட்டுள்ளது.

அச்சம் என்பது மடமையடா, நீதானே என் பொன்வசந்தம், என்னை நோக்கி பாயும் தோட்டா என மூன்று வார்த்தைகளில் டைட்டில் வைப்பதில் கவனம் ஈர்க்கும் கவுதம் மேனன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக கவுதம் மேனன் இயக்கத்தில் - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் - சிம்புவின் நடிப்பில் - தாமரை வரிகளில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மெகா ஹிட் அடித்தது.

இந்த நிலையில் இதே வெற்றிக்கூட்டணியின் அடுத்த படத்துக்கு தலைப்புடன் கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காக்க காக்க படத்தில் ஒன்றா இரண்டா ஆசைகள் பாடலின் சரணத்தில் வரும்  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனும் தாமரை எழுதிய வரிகளை தலைப்பாக வைத்து கவுதம் மேனன் இப்படத்தை இயக்குகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

ALSO READ: "ஆகஸ்டு 3-ஆம் தேதி.. மறுபடியும் மொதல்ல இருந்தா.. ஆடியன்ஸ் கொல்லப் போறாங்கனு நினைச்சேன்!".. மீனா Exclusive

STR ARR GVM Combo Nadhigalilae Neeradum Suriyan சிம்பு

People looking for online information on ARRahman, NadhigalilaeNeeradumSuriyanGauthammenon, Thamarai will find this news story useful.