ராஜமௌலியின் பேன் இந்தியா ஹிட் ‘RRR’… பிரபல ஓடிடியில்… எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் கூட்டணியில் உருவான RRR திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

SS Rajamouli RRR Movie OTT Release from may 20th

Also Read | பிரபல நடிகையை திருமணம் செய்ய போகும் நடிகர்!.. அஜித்துடன் திடீர் சந்திப்பு.. செம வைரல் ஃபோட்டோ

RRR ரிலீஸ்…

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.

SS Rajamouli RRR Movie OTT Release from may 20th

பேன் இந்தியா வெற்றி…

RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியது. ஒரு வாரத்தில் இந்த படம் 710 கோடி ரூபாயை மொத்த வசூலாக உலகம் முழுவதும் வசூலித்து உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த படம் வெளியானது முதல் 16 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.

SS Rajamouli RRR Movie OTT Release from may 20th

ஓடிடி ரிலீஸ்…

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 45 நாட்களுக்குப் பிறகு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீமாக உள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜி 5 புதிய ஓடிடி டிரைலரையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

SS Rajamouli RRR Movie OTT Release from may 20th

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

ராஜமௌலியின் பேன் இந்தியா ஹிட் ‘RRR’… பிரபல ஓடிடியில்… எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SS Rajamouli RRR Movie OTT Release from may 20th

People looking for online information on Jr ntr, Ramcharan, RRR, RRR Movie OTT Release, RRR Naatukoothu Song, SS Rajamouli will find this news story useful.