நடிகையை திருமணம் செய்த சூரரைப் போற்று ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டி.. கல்யாண போட்டோஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்சூரரைப் போற்று திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டி திருமணம் சென்னையில் நடந்துள்ளது.

Also Read | AK61 ஷூட்டிங்கில் அஜித்தை சந்தித்த ரசிகை.. அந்த நாளை மறக்காமல் இருக்க செய்த செயல்!
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சூரரைப் போற்று சாதனை படைத்தது.
இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சுதா கொங்கரா, சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் வென்று இருந்தனர்.
சூரரைப் போற்று படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிகேத் பொம்மி ரெட்டி, தனது நீண்ட கால தோழியும் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகையான மெர்சி ஜானை திருமணம் செய்துள்ளார். மெர்சி ஜான் தற்போது அமேசான் பிரைம் வீடியோவுக்கு மாடர்ன் லவ் தொடரில் நடித்துள்ளார்.
புது மணத்தம்பதியருக்கு ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன், நடிகை அனுபமா பரமேஸ்வரன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
Also Read | பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலில் நடிகை தமன்னா.. அரளிப்பூ, தேங்காய் சாற்றி வழிபாடு!