’ஸ்லம்டாக் மில்லினியர்’ நாயகியின் வருங்கால கணவர் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 22, 2019 06:28 PM
2008ம் ஆண்டு வெளியாகி 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லினியர் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் ஃப்ரீடா பிண்டோ.
![Slumdog Millionaire Fame Freida Pinto announces her relationship Slumdog Millionaire Fame Freida Pinto announces her relationship](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/slumdog-millionaire-fame-freida-pinto-announces-her-relationship-news-1.jpg)
மும்பையை பூர்வீகமாக கொண்ட அவர் ரைஸ் ஆஃப் த ப்ளானட் ஆஃப் ஏப்ஸ் (2011), நைட் ஆஃப் கப்ஸ் (2015) போன்ற ஹாலிவுட் படங்கள் மூலம் சர்வதேச ரசிகர்களை ஈர்த்தார்.
நடிப்பு, மாடலிங், சுற்றுலா என பிசியாக இருந்த அவர் தற்போது தன் வருங்கால கணவர் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கொரி ட்ரான் என்ற பெயர் கொண்ட இந்த புகைப்பட கலைஞருடன் பிண்டோ கடந்த ஒரு ஆண்டாக டேட்டிங் செய்து வருகிறார்.
நேற்று இன்ஸ்டாவில் ட்ரானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிண்டோ விரைவில் அவரை மணந்து கொள்ளப்போவதாக சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பிண்டோவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது.
Tags : Freida Pinto, Slumdog Millionaire