www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் உருவாகும் 'அயலான்'... வேற லெவல் அப்டேட் வெளியானது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் 'இன்று நேற்று நாளை'. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் கருணாகரன் யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

sivakarthikeyan ayalaan movie update சிவகார்த்திகேயன் அயலான் பட அப்டேட்

ஏலியன்கள் மற்றும்  சயின்ஸ் பிக்ஷன் சார்ந்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் துவங்கி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அயலான் படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 17 அன்று ரிலீசாகும் என்று சோனி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

sivakarthikeyan ayalaan movie update சிவகார்த்திகேயன் அயலான் பட அப்டேட்

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.