'திரௌபதி' குறித்து பிரபல திரையரங்கம் கருத்து - ''தர்பாருக்கு பிறகு மாஸ்ஸிவ் ஓபனிங்''
முகப்பு > சினிமா செய்திகள்மோகன்.ஜி தயாரித்து இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் இன்று ( பிப்ரவரி 28 ) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்ற சாதி தொடர்பான வசனங்கள் பெரும் விவாதத்திற்குள்ளானது இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தர்பாருக்கு பிறகு இந்த வருடம் திரௌபதி படத்துக்கு மாஸிவ் ஓபனிங். செமயான துவக்கம். வாழ்த்துகள் இயக்குநர் மோகன்'' என்று குறிப்பிட்டுள்ளது.
'திரௌபதி' படத்தில் ரிஷி ரச்சர்டு ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மோகன் ஜி இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜூபின் இசையமைக்க, மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
After #Darbar this year #Draupati gave us a Massive Opening after a dry season..
Fantastic Start 👏
Congrats @mohandreamer
— Ram Muthuram Cinemas (@RamCinemas) February 28, 2020