www.garudabazaar.com

சின்ன வயசுல சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து திரையுலகுக்கு வந்து குறுகிய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நெருங்கிய உறவினர் மகளான ஆர்த்தியை கரம் பிடித்தார். இத்தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். கனா படத்தில் வாயாடி பெத்தப்புள்ள பாடலை தந்தையும் மகளும் இணைந்து பாட அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்களுடன் இருக்கும் சிறு வயது ஃபோட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை ரசிகர்கள் இப்பொழுது இருவரும் ஆராதனாவுடன் இருக்கும் ஃபோட்டோவுடன் இணைந்து பகிர்ந்து வருகின்றனர்.

Sivakarthikeyan and his wife Aarthi's childhood photo viral | சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் சின்ன வயசு ஃபோட்�

People looking for online information on Aarthi, Sivakarthikeyan will find this news story useful.