www.garudabazaar.com
www.garudabazaar.com

இது வேற லெவல் வாத்தி கம்மிங்... மாஸ்டர் பாடலுக்கு அஸ்வின், ஹர்திக், குல்தீப் அசத்தல் நடனம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Ashwin with friends wow vaathi coming மாஸ்டர் பாடலுக்கு அஸ்வின், ஹர்திக் நடனம்

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின்  வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்குபோது மைதானத்தில் ஒலிபரப்பான 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அடுத்த டிரீட்டாக அஸ்வின், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் இணைந்து வேற லெவல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பட்டி தொட்டியெங்கும் இந்த வீடியோ பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இது வேற லெவல் வாத்தி கம்மிங்... மாஸ்டர் பாடலுக்கு அஸ்வின், ஹர்திக், குல்தீப் அசத்தல் நடனம்..! வீடியோ

Tags : Master, Ashwin

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ashwin with friends wow vaathi coming மாஸ்டர் பாடலுக்கு அஸ்வின், ஹர்திக் நடனம்

People looking for online information on Ashwin, Master will find this news story useful.