www.garudabazaar.com

அவரு 'திருட' இவங்க காப்பாத்த... என்னதான்பா நடக்குது இங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில நாட்களாக பாலாஜி-ஷிவானி இடையே நடந்த உரையாடல்களை வைத்து ஒருவேளை அப்படி இருக்குமோ? என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வந்தனர். அதிலும் நேற்று முன்தினம் பாலாஜி, ஷிவானியை பார்த்து 'ஆல் எவர் பியூட்டி' என பாடி வைக்க, சந்தேகம் வலுப்பெற்றது.

Shivani Stole Balaji's gold in bb house, netizens confused

அதை உறுதி செய்வது போல நேற்று பிக்பாஸ் வீட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றது. பாலாஜி தேடி எடுத்து வந்த தங்க காசுகளை ஜித்தன் ரமேஷ் திடீரென ஆட்டைய போட்டார். அவருடன் சேர்ந்து ஷிவானியும் அதை வேகமாக அள்ளினார். ரமேஷிடம் வேகம் காட்டிய பாலாஜி, ஷிவானியை ஒரு பேச்சுக்கு கூட ஒன்றும் சொல்லவில்லை.

தொடர்ந்து பாலாஜியின் தங்கத்தை வைத்து விளையாடிய ஷிவானி பின்னர் அவரிடம் அதை திருப்பி கொடுத்தார். ஷிவானி இதுவரை இப்படி யாரிடமும் விளையாடி பார்த்தது இல்லை என்பதால் என்னப்பா நடக்குது இங்க என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். பின்னர் நடைபெற்ற வீடு கூட்டும் பஞ்சாயத்தில் ஷிவானியை உட்கார வைத்து நான் வேலை செய்வேன் என பாலாஜி சொன்னது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Stole Balaji's gold in bb house, netizens confused

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.