www.garudabazaar.com

பாட்டு, டான்ஸ், 'பைட்' என களைகட்டிய ஹவுஸ்... யாருக்கு என்ன 'அவார்டு' கெடைச்சது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், நாமினேஷன் என அமர்க்களப்பட்டது. பேஷன் ஷோவில் அனைவரும் கலந்து கொண்டனர். நடுவர்களாக பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி இருந்தனர். வழக்கம்போல தலைவர் சுரேஷ் சக்கரவர்த்தி இதிலும் வித்தியாச கெட்டப் போட்டு அட்டகாசம் செய்தார். ஷிவானி, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ் மூவரும் நடனம் ஆடினர்.

Shivani and Ramesh wins Mr and Miss Bigg Boss award

சுரேஷ் சக்கரவர்த்தி பரதம் குறித்து வித்தியாசமான விளக்கம் கொடுத்தார். அனிதா சிறப்பாக பேசி ஹவுஸ்மேட்ஸ் மனதை வென்றார். சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. இதில் மிஸ் பிக்பாஸாக ஷிவானி தேர்வானார். இதில் 2-வது இடம் ஷிவானியின் தோழி கேப்ரியலாவுக்கு கிடைத்தது. மிஸ்டர் பிக்பாஸாக ஜித்தன் ரமேஷ் தேர்வானார். 2-வது இடம் ஆரிக்கு கிடைத்தது.

மிஸ் ஆட்டிட்டியூட் ஆக ரேகா தேர்வானார். டேலண்டட் கண்டெஸ்டண்ட் என ஆண்களில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தியும், பெண்களில் இருந்து அனிதாவும் தேர்வானார்கள். இதுபோல பேஷன் ஷோவில் Best dressed பிரிவில் ரமேஷ், சம்யுக்தா இருவரும் தேர்வானார்கள். Best Attitude என்னும் பிரிவின் கீழ் ஆரியும், ஷிவானியும் தேர்வானார்கள். மொத்தத்தில் நேற்று பெரியளவில் சண்டைகள் எதுவும் இல்லாமல் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Shivani and Ramesh wins Mr and Miss Bigg Boss award

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.